Thailand | Cambodia | மீண்டும் பயங்கரமாக மோதிக்கொண்ட 2 நாடுகள் - அதிர்ச்சியில் உலகநாடுகள்
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மீண்டும் எல்லை தகராறு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சாட்டும் நிலையில், தாய்லாந்து படைவீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கம்போடியாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் கம்போடியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் தாய்லாந்து - கம்போடியா அமைதி ஒப்பந்தம் முறிந்து இரு நாடுகளுக்கும் இடையே கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிய இருந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த திங்கட்கிழமையன்று... இரு நாடுகளுக்கு இடையேயானா எல்லையில் கம்போடியாவால் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடித்ததில் தாய்லாந்து வீரர் ஒருவர் காயமடைந்ததாக கூறி, கம்போடியா இதற்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என தாய்லாந்து வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
