நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்.. 2 இந்தியர்கள் பலி

x

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் Niger நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் கடத்தப்பட்டார்.

நைஜரில் உள்ள டோசோ Dosso பகுதியில் கடந்த 15ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாகவும்,

ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை தாய்நாட்டிற்கு கொண்டு வரவும், கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்யவும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், நைஜரில் உள்ள அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்