அந்தரத்தில் திக் திக் - நூலிழையில் உயிர் தப்பிய பிரபல பாடகி
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கேட்டி பெர்ரியின் இசை நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது, அவர் பிரமாண்ட பட்டாம்பூச்சி வடிவிலான அலங்கார பொருளில் அமர்ந்தபடி அந்தரத்தில் பறந்து வந்தார்... திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த அலங்கார பொருள் கேபிளில் இருந்து கீழே நழுவுவது போல் சென்ற நிலையில், கேட்டி பெர்ரியும் ரசிகர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்...
நல்வாய்ப்பாக விபத்து ஏதும் நிகழாத நிலையில், கேட்டி பெர்ரி மீண்டும் தன் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்தார்... இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன...
Next Story
