ஆஸி., ஓபன் போட்டியில் இருந்து ஜாம்பவான் விலகல் - ரசிகர்கள் சோகம்

x

ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் நடால் இல்லாமல் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ஸ்லாம் தொடர் நடைபெற உள்ளது. சமீபத்திய பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் நடால் தோல்வி அடைந்தார். அந்த தொடரின்போது காயம் அடைந்த அவர், ஆஸ்திரேலிய ஓபனில் இருந்தும் விலகினார். இதேபோல், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நிக் கிர்ஜியோஸும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதேபோல் மகளிர் பிரிவில் பெட்ரா கிவிட்டோவா, கரோலினா முச்சோவா உள்ளிட்டோரும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை...


Next Story

மேலும் செய்திகள்