Dubai-ல் உணவின்றி தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர் - இதயத்தை ரணமாக்கும் Video
அபுதாபியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வாலிபரை மீட்டுத்தர கோரி இந்திய தூதரகத்திடம் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துபாயில் கூலி வேலைக்காகச் சென்று சிக்கித் தவிக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் போர்மேன் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில், அவரது பாஸ்போர்ட் பணிபுரிந்த கம்பெனியில் சிக்கிக் கொண்டதால், கடந்த 6 மாதங்களாக தெரு ஓரங்களில் தங்கி வருகிறார். இந்த சூழலில், உணவுக்கும் தங்குவதற்கும் கூட வழியின்றி சிரமப்படுவதாக அவர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியத் தூதரகம் தலையிட்டு அவரை மீட்டுத்தர வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
