

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைகளுக்கும் தலீபான்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குண்டூஸ் (Kunduz) பகுதியில் உள்ள ஆப்கன் ராணுவத்தின் விமானப்படை தளத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். அந்த விமானப்படை தளத்தில் ஆப்கன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக இந்தியா வழங்கிய எம்.ஐ.-35(Mi-35) ரக ஹெலிக்காப்டர் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க இந்திய ராணுவம் மறுத்துள்ளது.