அமெரிக்கா ஏவுகணைகளை டெஸ்ட் செய்த தைவான்... சீனாவுக்கு ஷாக் கொடுத்த ரிசல்ட்

x

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய உயர் ரக போர் ஏவுகணைகளை சோதனை செய்துள்ள தைவான், அவற்றை வைத்து பயிற்சி மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து, தன்னாட்சியுடன் இயங்கி வரும் தைவான், அமெரிக்காவிடம் இருந்து 11 ஹிமார்ஸ் வகை (HIMARS) ஏவுகணைகளை வாங்கியுள்ளது.

இந்நிலையில், தைவானின் பிங்டங் கவுண்டியில் உள்ள Pingtung County ஜியுபெங் தளத்தில் அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள தைவான் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவ பலத்தில் தமது திறன்களை நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து மேலும் 18 ஹிமார்ஸ் வகை ஏவுகணைகளை தைவான் அடுத்த ஆண்டு வாங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்