Syria | Arrest | உலகையே நடுங்கவைத்த கொடூரன் | சிக்கியதும் ஸ்வீட்டுடன் கொண்டாடிய சிரியா மக்கள்
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கடந்த 2013-ஆம் ஆண்டு அரங்கேறிய ததமோன் படுகொலையின் முக்கியக் குற்றவாளி அம்ஜத் யூசுப் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போதைய அரசாங்கத்தின் கீழ் ராணுவப் புலனாய்வு அதிகாரியாக இருந்த இவர், 288 பேரை கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொன்ற கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த யூசுப், தற்போது ஹமா மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ததமோன் பகுதி மக்கள் வீதிகளில் திரண்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் அவர் கைது செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
