சுஸ்மா ஸ்வராஜ் முன் காந்தி பாடல் பாடிய மொராக்கோ இசைக்கலைஞர்

மொராக்கோ நாட்டின் பிரபலப் பாடகர் நாஸ் மெக்ரி, மகாத்மா காந்தியின் பஜனை பாடலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் முன் பாடி அசத்தியுள்ளார்.
சுஸ்மா ஸ்வராஜ் முன் காந்தி பாடல் பாடிய மொராக்கோ இசைக்கலைஞர்
Published on
மொராக்கோ நாட்டின் பிரபலப் பாடகர் நாஸ் மெக்ரி, மகாத்மா காந்தியின் பஜனை பாடலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் முன் பாடி அசத்தியுள்ளார். மொராக்கோ சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா, அங்குள்ள ராபட் நகரில் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதல்முறையாக மொராக்கோ வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், புல்வாமாவில், ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில், எனது பயணத்தை ரத்து செய்யலாம் என தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டனர். ஆனால் மொராக்கோ தீவிரவாதத்துக்கு எதிரான நாடு என்றும், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டுங்கள் என்றும் பிரதமர் மோடி அனுப்பி வைத்ததாகவும் சுஸ்மா குறிப்பிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com