முன்ஜாமீன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

முன்ஜாமீன் தொடர்பான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
முன்ஜாமீன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
Published on
முன்ஜாமீன் தொடர்பான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, ரவீந்திர பாட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். முன்ஜாமீன் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கக்கூடாது, வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் நீடிக்க வேண்டும் என சில தீர்ப்புகளும், முன்ஜாமீன் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும், அதன்பின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், நீதிமன்றத்தில் சரணடைந்து முறையான ஜாமீன் பெற வேண்டும் என சில தீர்ப்புகளும் கூறப்பட்டுள்ளன. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com