திடீரென மளிகை கடைக்குள் புகுந்த யானை - மக்கள் அச்சம்
தாய்லாந்தில், யானை ஒன்று திடீரென மளிகை கடைக்குள் புகுந்து அங்கிருந்த உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு கடையை சேதப்படுத்தியது. பசியால் அருகில் உள்ள இருந்த பூங்காவில் இருந்து வெளியே வந்து சுற்றி திரிந்த யானை, அருகில் இருந்த மளிகை கடைக்குள் புகுந்தது. இதனால் கடைக்குள் இருந்த பொதுமக்களும், ஊழியர்களும் அச்சமடைந்து வெளியேறினர். அப்போது உணவு பொருட்களை சாப்பிட்ட யானை, ஊழியர்கள் துரத்தியதை அடுத்து பின்னோக்கியே கடைக்குள் இருந்து வெளியேறியது.
Next Story
