திடீர் திருப்பம்.. தோண்டி எடுக்கப்பட்ட 32 உடல்கள்.. புரட்டி போட போகும் DNA டெஸ்ட்

x

சொர்க்கம் செல்ல பட்டினி கிடந்து உயிரிழந்த மக்கள் ?

கென்யாவில் பட்டினி கிடந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மேலும் 32 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கென்யாவில் கடந்த 2023ம் ஆண்டில் இயேசுவை சந்திக்க வேண்டும் என்றால் பட்டினி கிடந்து உயிரிழக்க வேண்டும் என போதித்த மத போதகரின் பேச்சைக் கேட்டு 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிர்விட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் படி, உடல்கள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஷகாஹோலா வனப்பகுதியில் இருந்து மேலும் 32 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், உறவுகளை பறிகொடுத்த மக்கள் டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்