அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் திடீர் ராணுவ பயிற்சி
கிரீஸ் நாட்டில், அமெரிக்கா தலைமையில், நேட்டோ நாடுகளின் ராணுவ பயிற்சிகள் நடைபெற்றன. கிரீஸ் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாந்தியில் Xanthi நடைபெற்ற இந்த ராணுவ பயிற்சியில், நேட்டோ நாடுகளின் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட துருப்புக்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டாங்கிகள் கொண்டு பயிற்சி நடத்தப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு பிறகு நேட்டோ உறுப்பினர்கள் பாதுகாப்பு செலவினங்கள் பெருமளவு உயர்ந்துள்ளதாக கூறப்படும் சூழலில், இந்த ஒருங்கிணைந்த பயிற்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story
