புதிய அதிபரின் முதல் விசிட் - இலங்கையில் தெரிந்த புதிய மாற்றம்... | Srilanka

இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள அனுரகுமார திசநாயக்க அனைத்து மத தலங்களுக்கும் சென்று ஆசி பெற்றார். தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர். பின்னர் கண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து கொழும்பு தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாசலுக்குச் சென்று சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசி பெற்றுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com