

இலங்கை நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய எம்.பி. சிறீதரன் பள்ளிகள் முன் நிற்கும் ராணுவம், துப்பாக்கி முனையில் சிறுவர்களை சோதனை செய்வது மிகக்கொடுமையான செயல் என்று சாடினார். நாசகார வேலைகள் அனைத்துக்கும் இஸ்லாமிய சகோதரர்களை குற்றம்சாட்டி துன்புறுத்தல் செய்வது வாடிக்கையாக உள்ளது என பேசிய சிறீதரன் இஸ்லாமியர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டால்தான் இலங்கையில் வாழ முடியுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்.