

கொரோனா வைரசின் தாக்கம் தேயிலை வர்த்தகத்திலும் எதிரொலித்துள்ளது. உலக சந்தையில் தேயிலைக்கு பெயர் பெற்ற இலங்கையில், தேயிலையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முழு முடக்கம், தேயிலை தொழிலாளர்களின் வரத்து குறைவு, பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்பட்ட தொய்வு ஆகியவற்றின் காரணமாக தேயிலை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.