இலங்கை -இந்தியா இடையே கப்பல் சேவை

இலங்கை - இந்தியா இடையே கப்பல் சேவையைதொடங்குமாறு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை -இந்தியா இடையே கப்பல் சேவை
Published on

இலங்கை - இந்தியா இடையே கப்பல் சேவையை தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் வரை தொடங்குமாறு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com