இலங்கையில் கனமழை - 5,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையின் வட மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கன மழையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இலங்கையில் கனமழை - 5,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Published on

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் இரு நாட்ககளாக கடும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைத்தீவில் சுமார் 370 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுத்தினர் ஈடுபடுள்ளனர். கிளிநொச்சி - இரணைமடு அணை நிரம்ப தொடங்கியுள்ளதால் அணை திறக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 500 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com