

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2 ஆயிரத்து 771 ஏக்கர் நிலப்பரப்பில் பசு மாடுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். பசு மாடுகளை இறக்குமதி செய்ய 5 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும், 4 ஆயிரத்து 200 பசுக்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.