இலங்கையில், அரசியல் பழிவாங்கும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஆணையக் குழு நிறுவன புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த கூட்டத்தில், வரிகளைச்சீர்திருத்தவும், அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைக்கவும் கோத்தபய ராஜபக்சே அறிவுறுத்தினார்.