ரனில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா

ரனில் விக்ரமசிங்க-வின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்

ரனில் விக்ரமசிங்க-வின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சபாநாயகரின் அனுமதியுடனேயே, முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற்று, ரனில் விக்ரமசிங்கவே பிரதமர் பதவியை வகித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின்படி நியமிக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சிறப்புரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், அதிபர் சிறிசேனவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com