இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவ முகாம்களை அகற்றப் போவதில்லை என பாதுகாப்பு செயலர் ஜேமர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய ஆட்சியில் தேசிய பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஈஸ்டர் தினத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று கூறிய அவர், நாட்டின் பாதுகாப்பிற்காக அவசியம் உள்ள பகுதிகளில் இராணுவம் இருக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.