வவுனதீவு சோதனை சாவடியில் முதல் தாக்குதல்

இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள் போலீஸ் விசாரனையில் தெரிய வந்துள்ளது.
வவுனதீவு சோதனை சாவடியில் முதல் தாக்குதல்
Published on

தற்கொலை தாக்குதலின் தலைவனாக செயல்பட்ட தீவிரவாதி ஸஹரானின் வாகன ஓட்டுநராக இருந்த 54 வயதான கபூர் என்கிற நபரை வவுனதீவி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கைத் துப்பாக்கி மற்றும் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 தேதி வவுண தீவு போலீஸ் சோதனைச் சாவடியில் பணியாற்றிய பொலீஸ் அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.தற்கொலை தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுக்கும்போது உடனிருந்ததாகவும், கல்முனை - சாய்ந்த மருதில் அடுத்த தற்கொலை தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டபோது உடன் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.கல்முனை, சாய்ந்தமருது பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன. வீடியோ, போஸ்டர்கள், ஆவணங்கள் கைப்பறப்பட்டுள்ளன.கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் முக்கிய பகுதியாக சாய்ந்தமருது வீடு இருந்துள்ளது. அங்கிருந்து வெடிப்பொருட்கள், டெட்டனேட்டர்கள், பறக்கும் ட்ரோன் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.தொடர் குண்டு தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோ அந்த வீட்டில் வைத்து படமாக்கப்பட்டுள்ளதகாவும் தெரிய வந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com