

இலங்கை தலைநகர் கொழும்புவில், ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது, 250 பேர் உயிரை பறித்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு சிறப்பு குழுவை அமைத்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.இந்த சிறப்பு குழுவில், மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எதிர் காலத்தில் இதுபோன்ற தாக்குதல் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு இந்த குழு, பரிந்துரை செய்யும். இந்த சிறப்புக்குழு, இன்னும் 6 மாதத்திற்குள் இலங்கை அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று மைத்ரிபால சிறி சேனா தெரிவித்துள்ளார்.