"சரத் பொன்சேகா விரும்பினால் பொதுஜன பெரமுன கட்சியில் இணையலாம்" - எம்.பி நாமல் ராஜபக்ஸ அழைப்பு

முன்னாள் ராணுவ தளபதியும் எம்.பியுமான சரத் பொன்சேகாவை பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொள்ள எம்.பி நாமல் ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்... தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் 45 ஆண்டு காலமாக எதிரெதிர் அரசியல் முகாம்களில் செயற்பட்டவர்கள் என்ற போதிலும் தாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக் கொண்டதாய் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்... முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் சரத் பொன்சேகா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் என்று கூறிய அவர், அந்த வகையில், அவர் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ள விரும்பினால் கதவுகள் என்றும் திறந்தே உள்ளதாகக் குறிப்பிட்டார்...

X

Thanthi TV
www.thanthitv.com