இலங்கை அதிபரின் சீன பயணம் ஒத்திவைப்பு

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் சீன பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபரின் சீன பயணம் ஒத்திவைப்பு
Published on
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் சீன பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட கோட்டாபய ராஜபக்ச, அடுத்ததாக வரும் 14 ஆம் தேதி சீனா செல்லவிருந்தார். இந்த பயணத்தின்போது, சீன அரசாங்கத்தால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துறைமுக நகரம் குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவரது சீன பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com