எங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை இன்னும் கைவிடவில்லை : அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

இலங்கை அரசு தங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை இன்னும் கைவிடவில்லை என அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டி உள்ளார்.
எங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை இன்னும் கைவிடவில்லை : அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு
Published on

இலங்கை அரசு தங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை இன்னும் கைவிடவில்லை என அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டி உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளித்து வருகின்ற அரசியல் கட்சியான, தேசிய மக்கள் கட்சியின் மாநாடு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, அதிகாரத்திற்கு வந்தால் இலங்கையை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும், இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, மிகப்பெரிய தோல்வியைத் தழுவும் என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com