இலங்கையில் கனமழை-வெள்ளம்: நிவாரண உதவிகளை அறிவித்தார் அதிபர் சிறிசேன

இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட வடமாகாண பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் கனமழை-வெள்ளம்: நிவாரண உதவிகளை அறிவித்தார் அதிபர் சிறிசேன
Published on

இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட வடமாகாண பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, உடைமைகளை இழந்தவர்களுக்கு முதல்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபாயும், தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும், நீரில் மூழ்கிய 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com