"என் மீது தவறு இருந்தால் மக்கள் தீர்மானிப்பார்கள்" - ராஜபக்சே, முன்னாள் பிரதமர்

இலங்கையில் அறிவித்தபடி தேர்தல் நடக்கும் என்றும், தவறு இருந்தால் மக்கள் எங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
"என் மீது தவறு இருந்தால் மக்கள் தீர்மானிப்பார்கள்" - ராஜபக்சே, முன்னாள் பிரதமர்
Published on

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகிய ராஜபக்சே பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி கொழும்பு விஜேராம மாவட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும் தேர்தலை நடத்துவதற்கும், ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார். அறிவித்தபடி ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்த ராஜபக்சே, ஆட்சியை கவிழ்த்து விட்டு தேர்தலை சந்திப்பதே தனது நோக்கமாக இருந்தது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com