

போதைப்பொருள் ஒழிப்பிற்கு, தான் எடுத்த முயற்சியை சீர்குலைக்கவே, இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்புவில் உள்ள நாலந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனை வழங்கும் வகையில், தான் கையெழுத்து போட்டபோது, அரசியல் பேதங்களின்றி கருத்துக் கூற வேண்டியவர்கள், அதற்கு எதிராக செயல்பட்டதாக கூறினார். இதனால் அந்த திட்டத்தை வெற்றிப்பெறச் செய்ய முடியவில்லை என்றும் சிறிசேன தெரிவித்தார்.