இஸ்ரேலுக்கு உளவு.. - ஈரானைச் சேர்ந்தவருக்கு மரண தண்டனை

x

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும், ஈரானிய எதிர்க்கட்சி குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

27 வயதான கட்டிடக்கலை மாணவர் அகில் கேஷவர்ஸ் என்ற இளைஞர் உளவுபார்த்த குற்றச்சாட்டின்கீழ் தூக்கிலிடப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானியர்களின் மரணதண்டனை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்