Spiderman | Police | சிக்கிய Drugs Gang... ஸ்பைடர்மேன் வேடத்தில் அலறவிட்ட போலீஸ்

x

பெரு நாட்டில், ஸ்பைடர்மேன் வேடத்தில் சென்று போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீஸ் அதிகாரி ஒருவர் மடக்கிப் பிடித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், ஹாலாவீன் கொண்டாட்டங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தலை தடுக்க அதிரடி சோதனை நடைபெற்றது. தலைநகர் லிமாவில், சாண்டியாகோ டி சர்கோ SANTIAGO DE SURCO என்ற இடத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸ் அதிகாரி ஒருவர் ஸ்பைடர்மேன் வேடத்துடன் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதில் கொக்கைன் cocaine போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்