Space X | Elon Musk | மைக்ரோசாப்ட், அமேசானை ஓரம் தள்ளி எங்கோ எகிறிய ஸ்பேஸ் எக்ஸ்-ன் சந்தை மதிப்பு

Space X | Elon Musk | வரலாற்று சாதனை - மைக்ரோசாப்ட், அமேசானை ஓரம் தள்ளி எங்கோ எகிறிய ஸ்பேஸ் எக்ஸ்-ன் சந்தை மதிப்பு பங்குச்சந்தையில் களமிறங்கிய சில நாட்களிலேயே, எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பை முந்தி, உலகின் டாப் 5 மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இணைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 14 சதவீதத்திக்கும் அதிகமாக உயர்ந்தன. இதன் மூலம், அதன் ஆரம்ப பொது வெளியீட்டு விலையான 135 டாலரை விட 62 சதவீதம் அளவுக்கு பங்குகள் எகிறியுள்ளன. இந்த அசுர வளர்ச்சியால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 238 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com