குடும்ப கல்லறையில் வடகொரிய அதிபர் மரியாதை

x

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un), நீண்ட நாட்களுக்குப்பின் தனது குடும்ப கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தனது தந்தையின் பிறந்தநாளையொட்டி, பியாங்யாங்கில் (Pyongyang) உள்ள கல்லறைக்குச் சென்ற அதிபர், நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தார். இதனிடையே, பியாங்யாங்கில் குடியிருப்புகள் கட்டப்படும் திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கிம் ஜாங் உன் பங்கேற்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்