ஜப்பானுடன் கைகோர்த்த தென்கொரியா | ட்ரம்பை சந்தித்து சொல்லப்போகும் முடிவு?

x

தனது ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு தென்கொரியா அதிபர் லீ அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். திங்கள் அன்று வாஷிங்டனில் வைத்து அமெரிக்கா அதிபர் ட்ரம்பை சந்திக்கும் அவர், அங்கு வர்த்தகம் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தை, வட கொரியாவிற்கான அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்க அதிபரின் வரி எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானும் தென்கொரியாவும் அமெரிக்க இறக்குமதிகள் மீது பதினைந்து சதவீதம் வரி விதிக்க ஒப்புக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்