Rob Reiner | பிரபல இயக்குநரை கொடூரமாக கொன்ற மகன் ஆஜர்

பிரபல இயக்குநரை கொடூரமாக கொன்ற மகன் ஆஜர்

#robreiner #robreinerson பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர் கொலை வழக்கு - மகன் நீதிமன்றத்தில் ஆஜர் A Few Good Men உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிஷேல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அவர்களது மகன் நிக் ரெய்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான 32 வயதான நிக் ரெய்னர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிலேயே அவர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் நிலையில் இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை கலிபோர்னியா நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com