சமூக வலைதளங்களுக்கு திடீர் தடைவிதித்த நாடு... தொற்றிய பரபரப்பு | Social Media

x

தெற்கு சூடானில் சமூக வலைதளங்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சி நடைபெறும் சூடானில், துணை ராணுவத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சூடானின் கெசிரா மாநிலத்தில், தெற்கு சூடானியர்களை போராளிக் குழுக்கள் கொன்றதாகக் கூறி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கொதிப்படைந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வன்முறை தொடர்பான வீடியோக்கள் பரவலால் சமூக ஊடகங்களுக்கு தெற்கு சூடானில் 30 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இது 90 நாள்களுக்கு நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.


Next Story

மேலும் செய்திகள்