பனிப்பொழிவு - விமான, ரயில் போக்குவரத்து முடக்கம்

x

ஜப்பானின் வட பகுதியான ஹொக்கைடோ மாகாணத்தில் அதீத பனிப்பொழிவு தாக்கியதால், சாலைகள் பனியில் புதைந்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சப்போரோ நகரில் 1 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதேபோல், நியூ சிடோசே விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே தங்க நேரிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்