ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு...உலகையே பரபரப்பாக்கிய சம்பவம்

ஸ்லோவாகியா நாட்டின் பிரதமரான ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்லோவாகியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிருந்து வடகிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ராபர்ட் ஃபிகோ திரும்பியுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அவர் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் ராபர்ட் ஃபிகோவின் வயிற்று பகுதியில் தோட்டா பாய்ந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த‌ அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com