

மாவீரர் தினம் - மெழுகு சுடர் மத்தியில் கண்ணீர்த் துளிகள்
மாவீரர் தினத்தை முன்னிட்டு, ஈழ விடுதலைக்கான போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அவர்கள், மெழுகுச்சுடர்களின் மத்தியில், உயிரிழந்த தங்களின் உறவுகளை நினைத்து கண்ணீர் வடித்தனர். அப்போது மணியோசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து மாவீரர் நாள் பாடல் ஒலிபரப்பப்பட்டது.