

சைபீரியா வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்க 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வலியுறுத்தி உள்ளனர். தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேரில் பரவிய காட்டுத்தீயை அனைத்துள்ள நிலையில், இன்னும் 28 லட்சம் ஹெக்டரில் பரவி வரும் தீயை விரைந்து அணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 72 ஆயிரம் கையெழுத்திட்டு அரசுக்கு மனு அளித்துள்ளனர்.உரல் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீ மக்களின் சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் எனவும், எனவே அந்த பகுதியில் அவசர நிலை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.