ஊழியருடன் ரகசிய உறவு - நெஸ்லே நிறுவனத்தின் CEO மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஊழியருடன் ரகசிய உறவு- நெஸ்லே நிறுவனத்தின் சிஇஓ பதவி நீக்கம்
ஸ்விஸ் உணவு நிறுவனமான நெஸ்லே, தனது தலைமை நிர்வாக அதிகாரி லாரன்ட் ஃபிரீக்ஸை (Laurent Freixe) அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருடன் அவர் ரகசிய உறவு வைத்திருந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து நிறுவனம் நடத்திய விசாரணையில், ஊழியர் உடனான ரகசிய உறவு தெரியவந்தது. இது, நெஸ்லேவின் விதிகளுக்கு எதிரானது என்பதால் லாரன்ட் ஃபிரீக்ஸை பதவி நீக்கம் செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நெஸ்பிரெஸ்ஸோ காபி பிரிவின் தலைவராக இருந்த பிலிப் நவ்ராட்டில், புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Next Story
