சவுதி புரோ லீக் கால்பந்து போட்டி - அல் ஹிலால் அணி வெற்றி
சவுதி புரோ லீக் கால்பந்து போட்டி - அல் ஹிலால் அணி வெற்றி
சவுதி ரியாத்தில் நடந்த கால்பந்து போட்டியில் அல்-ஹிலால் அணி 2-0 என்ற கணக்கில் அல்-ரியாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சவுதி அரேபியாவில் சவுதி புரோ லீக் சீசன் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டியில் அல்-ஹிலால் அணியும் அல்-ரியாத் அணியும் மோதியது. இந்த போட்டியின் போது முன்னாள் லிவர்பூல் அணியின் வீரர் டார்வின் நுனேஸ் அடித்த கோல் ஃபவுல் காரணமாக மறுக்கப்பட்டது. அல்-ஹர்பி , மால்காம் இருவரும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டத்தின் இறுதியில் அல்-ஹிலால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல்-ரியாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Next Story
