சவுதி அரேபிய எண்ணெய் நிறுவன தாக்குதல் எதிரொலி : கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 % உயர்வு

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சவுதி அரேபிய எண்ணெய் நிறுவன தாக்குதல் எதிரொலி : கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 % உயர்வு
Published on

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவுதி அரேபியாவின் ஆரம்கோ நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயல் மீது, ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, எண்ணெய் உற்பத்தியை அந்த நாடு பாதியாக குறைத்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல்களில், வரும் நாட்களில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன. இதற்கிடையே, சவுதியில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்தியாவுக்கான ஏற்றுமதி பாதிக்காது என சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com