Sanae Takaichi | ஜப்பான் பிரதமருடன் டிரம்ஸ் வாசித்து மிரட்டிய தென்கொரிய அதிபர் - வைரல் வீடியோ
ஜப்பான் பிரதமருடன் டிரம்ஸ் வாசித்து அசத்திய தென்கொரிய அதிபர்
ஜப்பான் பிரதமர் சனே டகைச்சி தென்கொரிய அதிபர் லி ஜே மியுங் - ரெண்டு பேரும் சேர்ந்து கொரிய பாப் பாடலுக்கு டிரம்ஸ் வாசிச்சு அசத்தினாங்க...உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற தென்கொரிய அதிபர் லி ஜே மியுங், அந்நாட்டு பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.இந்நிலையில், மாநாட்டிற்கிடையே ஜப்பான் பிரதமரும், தென்கொரிய அதிபரும் இணைந்து கே-பாப் K-pop பாடலுக்கு டிரம்ஸ் வாசித்தனர்குறிப்பாக, 'டைனமைட்' மற்றும் Kpop Demon Hunters-ல் இடம்பெற்றுள்ள 'Golden' போன்ற பாடல்களுக்கு டிரம்ஸ் வாசித்தனர். பின்னர் இருவரும் கைதட்டி மகிழ்ந்தனர்.தென்கொரிய அதிபர் வெறும் 5 முதல் 10 நிமிடங்களில் டிரம்ஸ் வாசிக்கக் கற்றுக்கொண்டதாக ஜப்பான் பிரதமர் சனே டகைச்சி தெரிவித்தார்.
