அமெரிக்க ஓபன் - பட்டம் வென்றார் சபலென்கா
அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர்ப் பிரிவில், பெலாரஸைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை சபலென்கா (Sabalenka) பட்டம் வென்று அசத்தியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, அமெரிக்க வீராங்கனை அனிசிமோ இருவரும் மோதினர். சபலென்கா, அனிசிமோவை 6க்கு 3, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இது சபலென்காவின் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
Next Story
