புதினை கொலை செய்ய திட்டமா? வெடித்த லிமோ கார்... அதிர்ச்சியில் உலகம்

x

அமெரிக்காக்கு அப்பரமா உலக அளவுல அதிகபட்ச பாதுகாப்ப கொண்ட தலைவர்கள்ள ஒருத்தர் -தான் ரஷ்ய அதிபர் புதின். அவர் ஒரு இடத்துக்கு போராருன்னா பல வாரங்களுக்கு முன்னாடியே பாதுகாப்பு ஏற்பாடுகள்ளாம் முடிக்கிவிடபட்டுடும் அந்த அளவுக்கு பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். இவ்வளவு கெடுபிடிகள் நெரஞ்சு இருக்கும்போது தான் புதினோட பாதுகாப்பு கான்வாய்ல இருந்த ஒரு கார் திடீருனு வெடிச்சு சிதறியிருக்கு. ரஷ்ய நிறுவனமான Aurus Motors ஆல உருவாக்கப்பட்ட Aurus Senat Limousine கார் தான் மாஸ்கோல இருக்கர ரஷ்ய உளவுத்துறை அமைப்பான FSB ஓட தலைமை அலுவலக அருகே வெடிச்சிருக்கு.இந்திய மதிப்புல 3 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் இந்த கார்ல பல உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் நெரஞ்சு உருவாக்கப்பட்டுருக்கு.குறிப்பா அதிபர் புதின் அதிகம் பயன்படுத்தக்கூடிய இந்த கார தான் தன்னுடைய நண்பர்களுக்கு அவர் பரிசா கொடுப்பாருன்னும் வட கொரிய அதிபர் கிம்ஜான் உன்னுக்கு கூட லிமோசின் வகை காரத்தான் புதின் பரிசாக கொடுத்ததாவும் சொல்லப்படுது. இந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்ப ஏற்படுத்தியிருக்கர நிலையில ரஷ்ய அதிபர் புதின கொலை செய்ய நடத்தப்பட்ட சதியா இருக்குமோங்கர கேள்வி தான் இப்ப உலக அரங்கில பிரதானமா எழுது. அதே நேரம் ரஷ்ய அரசாங்கம் தரப்புல எந்தவித விளக்கமும் கொடுக்கப்படல. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கு கடந்த 3 ஆண்டு காலமா போர் நடந்துட்டு இருக்கர நிலையில இந்த சம்பவம் நடக்கறதுக்கு சில தினங்களுக்கு முன்னாடி தான் உக்ரேன் அதிபர் Zelensky, ரஷ்ய அதிபர் புதிநுக்கு ஆபத்தான நோய் இருக்கரதுனால அவர் சீக்கிரம் உயிரிழப்பார்னு சொல்லியிருந்தார். இதுவுமே உலக அரங்கில விமர்சிக்கப்பட்ட சூழல்ல தான் இந்த விபத்தும் நடந்திருக்கு. பல சந்தேகள்ள எழுப்பியிருக்கூடிய இந்த சம்பவம் தொடர்பா தொடர்ந்து உச்சக்கட்ட விசாரணையும் நடந்துட்டு வரதா சொல்லப்படுது.


Next Story

மேலும் செய்திகள்