உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி, 60 பேர் காயம்

x

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷ்யா வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கார்கிவ்வை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன.

இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்றன. உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரில் பல முறை தாக்குதலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்