விடாப்பிடியாக நிற்கும் ரஷ்யா | புதினின் முடிவை மாற்றுவாரா டிரம்ப்?

x

நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை" - ரஷ்யா

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான தங்கள் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

தாங்கள் உரிமை கோரும் பிராந்திய பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் வெளியேற வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு தனது நிபந்தனைகள் குறித்து ரஷ்யா அதிபர் புதின் வெளியிட்ட அறிவிப்புகளில் இருந்து அவர் மாறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உக்ரைன் தனது நேட்டோ லட்சியங்களை கைவிட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு வலியுறுத்தியது போலவே... உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுபவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைனில் உள்ள கிரிமியா, லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகியவை ரஷ்யாவின் ஒரு பகுதி என்றும் ரஷ்யா கூறி வருகிறது.

தற்போது உக்ரைனின் 19 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.

இன்னொரு புறம் பிராந்திய பகுதிகள் குறித்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு முன்பாக போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தி வருகிறது.

இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சந்திப்பு கை கொடுக்குமா ? என்ற கேள்வி நீடிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்