Russia | Putin | "கோபத்துக்கு விலை.." புதினை நேரடியாக சீண்டிய பிரிட்டன் - கொதிப்பில் ரஷ்யா

x

ரஷ்ய அதிபர் புதின் தேவையற்ற கோபத்துக்கு விலை கொடுப்பதாக பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் விமர்சித்தார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நிதியுதவி செய்த அந்நாட்டின் 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதே நிறுவனங்கள் மீது பிரிட்டனும் கடந்த 16-ஆம் தேதி தடை விதித்திருந்தது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தேவையில்லாமல் கோபப்பட்டு அதற்கான விலையைக் கொடுப்பதாகவும், ரஷ்யா, உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்